SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் பணிபுரிபவர்களின் சேவைக்கு ஏற்ப ஊதியம் இல்லை..: ஐகோர்ட் வருத்தம்

2020-04-10@ 15:56:48

சென்னை: நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் பணிபுரிபவர்களின் சேவைக்கு இணையான ஊதியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய,மாநில  அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். அதேபோல் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழங்கறிஞர் மில்டன் என்பவர் இரண்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் கூறுகையில்; 37,648 முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் தமிழக அரசிடம் உள்ளதாகவும், 14,000 கொரோனா பரிசோதனை கருவிகள் இருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து உணவு இல்லாமல் யாரும் இருக்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். வழக்கறிஞர் அரவிந் பாண்டியனின் வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும்
 மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மனித குலத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக நாள் முழுவதும் போராடக்கூடியவர்களான மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கக்கூடிய ஊதியம் அவர்களின் தேவைக்கு ஏற்ப இல்லை என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான தருணத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய மாநில அரசுகள் ஊதியம் வழங்கும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்து இந்த வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்