SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் மாநகர போலீசார் புதிய யுக்தி வாரத்தில் 2 நாள்தான் இனி வெளியே வரலாம்: ஊர் சுற்றுவதை தடுக்க வாகனங்களில் வண்ண குறியீடு

2020-04-10@ 15:12:54

சேலம்: சேலம் மாநகரில் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் தேவையில்லாமல்  சுற்றி திரிவதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில்  வாகனங்களில் 3வண்ணங்களில் குறியீடு போடப்படுகிறது. இதன் மூலம் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே வாகனங்கள் வெளியே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி, வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறிக்கொண்டு பலர், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சேலம் மாநகர சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் வாரத்திற்கு இரு முறை மட்டுமே வெளியே சென்று வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வகையில், வெளியே செல்லக்கூடிய வாகனங்களில் கலர் குறியீடு இட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முறைப்படி இன்று தொடங்குகிறது.

இது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் கலர் குறியீடு தீட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் (10ம்தேதி) தொடங்குகிறது. முதல்நாளான இன்று  (வெள்ளிக்கிழமை) வெளியில் வரும் அனைத்து வாகனங்களுக்கும் சிவப்பு வண்ண குறியீடு தீட்டப்படும்.  இந்த வாகனங்கள் மறுபடியும் திங்கட்கிழமை தான் வெளியே வரவேண்டும். இதே போல் சனிக்கிழமை வெளியில் வரும் வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்படும். இந்த வாகனங்கள் மீண்டும் செவ்வாய்கிழமை தான், வெளியில் வரவேண்டும். ஞாயிற்றுக்கிழமை வெளியில் வரும் அனைத்து வாகனங்களுக்கும் பச்சை வண்ணம் தீட்டப்படும். இந்த வாகனங்கள் மீண்டும் புதன்கிழமை தான் வெளியில் வரவேண்டும். மேற்கண்ட 3வண்ணங்களும் தீட்டப்படாத வாகனங்கள் வியாழக்கிழமை அனுமதிக்கப்படும். அன்றைய தினம் பச்சை வண்ணம் தீட்டப்படும்.

இந்த வாகனங்கள் மீண்டும் ஞாயிறு மற்றும் புதன் கிழமையில் இயக்க அனுமதிக்கப்படும். இதை கடைபிடிக்காத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, வாகன ஓட்டுநர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை, இந்த விதிமுறையும் அமலில் இருக்கும்.  வண்ணங்களை அழித்து விட்டு வாகனங்களை ஓட்டினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் திருப்பி தரப்படமாட்டாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்