SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தும் கொரோனா : பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது; பிஞ்சு குழந்தைகளின் உயிரையும் பறிக்கும் பரிதாபம்

2020-04-10@ 15:01:47

வாஷிங்டன் :  உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 96,265 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,10,062 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,58,622 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 49,117 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,68,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 143,626 பேரும், ஸ்பெயினில் 153,222 பேரும்,ஜெர்மனியில் 118,235 பேரும்,பிரான்சில் 117,749 பேரும், சீனாவில் 81,907 பேரும், ஈரானில் 66,220 பேரும்,ஐரோப்பியாவில் 65,077 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 16,697 பேரும், ஸ்பெயினில் 15,447 பேரும்,ஜெர்மனியில் 2,607 பேரும், பிரான்சில் 12,210 பேரும், சீனாவில் 3,336 பேரும், ஈரானில் 4,110 பேரும், ஐரோப்பியாவில் 7,978 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 199 பேர் உயிரிழந்த நிலையில், 6,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே உலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட மிக மோசமான சூழல் உருவாகும் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. இதே போல், கொரோனா வைரசால் உலக பொருளாதார ரூ.310 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும் என்றும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற முக்கிய வளர்ந்த நாடுகள் கடுமையான அழிவை சந்திக்கும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்