SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிங்க; அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை

2020-04-10@ 14:57:41

சென்னை: தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு  நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம்  கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது கட்டத்தில்தான் தற்போது வரை இருக்கிறது. கொரோனா வைரஸ் நோயின் நிலைமையை அறிந்து, மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்தியப்பின் தான், ஊரடங்கு நீடிக்கப்படுமா,  முடித்துக்கொள்ளப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். இதன் தொடர்ச்சியாக, இன்று, கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை  செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

 இந்த கூட்டம் முடிந்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருத்துவ நிபுணர்கள் குழு உறுப்பினர்கள், தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு  தேவைப்படுகிறது. தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர். மருத்துவக்குழு பரிந்துரைப்படி ஊரடங்கை மேலும், 2 வாரங்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 இதனால், தான் நாளை தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியுடனான அனைத்து மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள சூழல் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடியிடம் அனுமதி கோரவும் வாய்ப்புள்ளது. பஞ்சாப் மற்றும் ஒடிசாவில் வரும் 30ம் தேதி வரை தனது மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து தானாகவே உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவும் விருப்பம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது நாளை தெரியவரும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்