SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடை திறந்தா என்ன? திறக்கலன்னா என்ன?.. தங்கம் விலை தொடர்ந்து 'கிடுகிடு' : சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.35,224க்கு விற்பனை

2020-04-10@ 14:47:24

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ரூ.35,224க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று (ஏப்ரல் 10) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,403 ஆக உள்ளது. தங்கம் இறக்குமதியில் இந்தியா உலகின் 2வது பெரிய நாடாக இருந்து வருகிறது. நகை செய்வதற்காகவே தங்கம் அதிக அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டு மார்ச் மாதம் கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் இறக்குமதி 73 சதவீதம் வரை குறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம், பொருளாதார பின்னடைவால் விற்பனை சரிவு, மக்களிடம் வாங்கும் திறன் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கொரோனா வைரஸ் பரவல், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வைரஸ் பரவலுக்கு அஞ்சி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கி குவித்து வருகின்றனர். இந்தியாவிலும் ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வாங்காமல் இருந்தாலும், தினமும் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த ஜனவரி முதல் உயர்ந்து வரும் தங்கம் விலை வருமாறு:

கடந்த 2020, ஜன.1 கிராம் (22 கேரட்) - ரூ.3,746, (24 கேரட்) - ரூ.3,930. 2020, பிப்.1 (22 கேரட்) - ரூ.3,888, (24 கேரட்) - ரூ.4,079. மார்ச் 1 - (22 கேரட்) ரூ.3,986, (24 கேரட்) - ரூ.4,191.ஏப்.1 (22கேரட்) - ரூ.4,167, (24 கேரட்) - ரூ.4,365 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 8 நாட்களில் படிப்படியாக உயர்ந்து ஏப்.8ல் (22 கேரட்) - ரூ.4,309 (ஒரு பவுன் 34,472), ஏப்ரல் 9ல் (24 கேரட்) - ரூ.4,368 (ஒரு பவுன் ரூ.34,944 ) என உயர்ந்துள்ளது. நகைக்கடைகள் மூடிக்கிடக்கின்றன. உலக பொருளாதாரம் பின்னடைவு கண்டுள்ளது. கச்சா எண்ணெய் பேரல் 20 டாலருக்கு கீழ் சரிந்து வருகிறது. ஆனால் தங்கம் மட்டும் விற்பனை, நுகர்வு இல்லாதபோதும் உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்துக்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்