SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பாதிப்பு எதிரொலி: தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

2020-04-10@ 14:35:41

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. குறிப்பிட்ட ஆவணங்களை நாளைக்குள் nsct2015@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளது. 9865603660, 9841765110 என்ற எண்ணிலும் ஆவணங்களை வாட்ஸ்அப் செய்யலாம் என தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கிற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் மூடப்பட்டன. தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. இதனால் திரைப்படத்துறையினர், திரைப்பட வணிகம் சார்ந்த பல்வேறு தரப்பினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் அந்தந்த திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அவர்களால் முடிந்த உதவி தொகையை அறிவித்து வருகிறார்கள்.

அதே போல் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், பெப்சி தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பணமாகவும் பொருளாகவும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. குறிப்பிட்ட ஆவணங்களை நாளைக்குள் nsct2015@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளது. 9865603660, 9841765110 என்ற எண்ணிலும் ஆவணங்களை வாட்ஸ்அப் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்