SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒடிசாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பா?; முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை கூடுகிறது அமைச்சரவை கூட்டம்

2020-04-10@ 14:27:07

சென்னை: உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து வருகிறது. தற்போது, நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி விட்டது. 199 பேர் பலியாகி உள்ளனர். நோய் தொற்றை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. வரும் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடியும் நிலையில், வைரசின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், முழு ஊடரங்கை நீட்டிக்க வேண்டுமென மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது பற்றி மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு ஒருபடி மேலே பஞ்சாப், ஒடிசா அரசுகள், வரும் 30ம் தேதி வரை தனது மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து தானாகவே உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா அதிகம் பாதித்த மாநிலத்தில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு நிலவரம் பற்றி கடந்த 2ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தற்போது, 2வது முறையாக நாளை (11ம் தேதி) மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநில முதல்வர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? புதிய செயல் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடியவுள்ள ஊரடங்கு நீட்டிப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது. இருப்பினும், பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்