SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தாக்கத்தில் தொடர்ந்து தமிழகம் 2-ம் இடம்: தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

2020-04-10@ 13:47:33

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.  கொரோனா வைரஸ் நோயின் நிலைமையை அறிந்துதான், ஊரடங்கு நீடிக்கப்படுமா, முடித்துக்கொள்ளப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இது ஒரு தொற்றுநோய் நாளுக்கு நாள் தொற்று நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது கட்டத்தில்தான் தற்போது வரை இருக்கிறது. 2வது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்குதான் அரசு  அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறினார். இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்