SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 9,393 வாகனங்கள் பறிமுதல்; ரூ.45 லட்சம் அபராதம் வசூல்...தமிழக காவல்துறை அறிக்கை

2020-04-10@ 12:43:44

சென்னை: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளது.

பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி, இன்று(மார்ச் 24) முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். வரும் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடியும் நிலையில், வைரசின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், முழு ஊடரங்கை நீட்டிக்க வேண்டுமென மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள பஞ்சாப், ஒடிசா அரசுகள், வரும் 30ம் தேதி வரை தனது மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து தானாகவே உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் விற்பனையாகும் பால், காய்கறி, இறைச்சி, மீன், மருத்தகம் உள்ளிட்ட கடைகளுகள் கட்டுப்பாடுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது விதமாக காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவசியமின்றி சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களில் 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறயவர்களிடமிருந்து ரூ.45,13,544 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்