SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார் ஊழியர் உள்பட 2 பேர் கைது: 502 மதுபாட்டில்கள், ரூ.70 ஆயிரம் பறிமுதல்

2020-04-10@ 12:02:47

திருக்கழுக்குன்றம்:  திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் எஸ்ஐ முத்துகுமார் மற்றும் போலீசார் கல்பாக்கம் அடுத்த வாயலூர் செக்போஸ்ட் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 2 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று, தீவிரமாக விசாரித்தனர். அதில், வாயலூரை சேர்ந்த சபாபதி (49). வாயலூரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை கொண்டு சென்றது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி, வாயலூரில் உள்ள டாஸ்மாக் கடை பாருக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 508 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து பார் ஊழியர் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வினாயகமூர்த்தி (42) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், ₹70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்