SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உரிய பலனை தரவில்லை என்பதால் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பரிந்துரைக்க ஐசிஎம்ஆர் மறுப்பு

2020-04-10@ 11:55:54

டெல்லி : மலேரியா சிகிச்சைக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மறுத்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கழக ஆய்வாளர் ராமன், கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றார். இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை உரிய பலனை தரவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளிக்கலாம் என்று அமெரிக்க மருத்துவக் கழகம் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. இதனால் தான் இந்தியாவிடம் இருந்து 3 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா வாங்கி குவித்தது. ஏற்றுமதிக்கான தடையை விலக்கியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றியும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரைப்பதில்லை என்று இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் முடிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்