SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுக்குமாடி குடியிருப்பில் திருட சென்றதை மறந்து பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது: திருமங்கலத்தில் பரபரப்பு

2020-04-10@ 11:54:15

சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் தங்கி காவலராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணா பகதூர் (30). நேற்று அதிகாலைஅடுக்குமாடி குடியிருப்பு வாசல் அருகே கிருஷ்ணா உறங்கி கொண்டு இருந்தார். அவரது, மனைவி அடுக்குமாடி மேல் பகுதியில் லிப்ட் அறையில் உறங்கியுள்ளார். அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் பகதூர் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய பகதூர் மனைவி திருடன் திருடன் என கூச்சலிடவே அங்கு இருந்து மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.

இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை கீழ்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அமைந்தகரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அண்ணாநகர் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலையில் பால் விநியோகிப்பது போல சென்று சுவர் ஏறி குதித்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திருடுவதற்காக சென்றுள்ளார். அப்போது  பெண் அரை நிர்வாண கோலத்தில் உறங்கியதால் சபலத்தில் கத்தியை காட்டி மிரட்டி  பலாத்காரம் செய்ததையும் ஒப்புகொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்