SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் சாவு: தந்தை போலீசில் புகார்

2020-04-10@ 11:50:13

தாம்பரம்: மறைமலைநகர், சாமியார் கேட், சாய்பாபா கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சங்கீதா (22). தொண்டை வலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவரை கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர், தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும், எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த மாதம் 20ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் சங்கீதா ரத்த வாந்தி எடுத்து சுயநினைவை இழந்துள்ளார். அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, அறுவை சிகிச்சையில் சிறிய தவறு நடந்துவிட்டது. அதை நாங்களே சரிசெய்கிறோம் என கூறியுள்ளர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சங்கீதாவை வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல கிருஷ்ணனை மருத்துவமனை நிர்வாகத்தினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து, சங்கீதாவை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கீதா உயிரிழந்தார். இதையடுத்து சங்கீதாவின் இறப்பிற்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி, கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்