SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜார்கண்டை தொடர்ந்து அசாமும் பட்டியலில் 20-வது மாநிலமாக சேர்ந்தது; கொரோனா தாக்குதலால் மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி

2020-04-10@ 09:51:22

திஸ்பூர்: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24   மணிநேரத்தில் மட்டும் 547 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 199 பேர் உயிரிழந்த நிலையில், 504 பேர் கொரோனா பிடியில் இருந்து   குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் 19 மாநிலங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் 20-வது மாநிலமாக அசாம் சேர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் முதன்  முறையாக சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது கொரோனா நோயாளி இன்று காலை உயிரிழந்தார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மாநிலத்தில் மொத்தம் 28 பேர் சிகிச்சை பெற்று வந்த  நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுதான் அசாம் மாநிலத்தில் முதல் பலி. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதுவரை யாரும் குணமடையவில்லை. நேற்று,  ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 19-வது மாநிலமாக ஜார்கண்ட் சேர்ந்தது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். 125 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 834 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம்   இடத்தில் உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்