SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா நிவாரண அரிசியை கடத்த முயற்சி ரேஷன் கடை ஊழியர் உட்பட 2 பேர் கைது: 200 கிலோ அரிசி பறிமுதல்

2020-04-10@ 00:51:42

ஈரோடு: கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய அரிசியை கடத்த முயன்ற ரேஷன் கடை ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிவாரண உதவியாக மக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில் மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரி சின்னியம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசியை கடத்துவதாக மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் சென்று கடை முன்பு புறப்பட தயாராக இருந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில், 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், சிவகிரி, காந்திஜி நகரை சேர்ந்த டிரைவர் அருண் (24), விற்பனையாளர் வேலாயுதம் (43) ஆகியோர் அரிசியை கடத்தி, வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனைக்காக எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது.  இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், ஈரோடு ஜேஎம்-3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பவானி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கிலோ அரிசி, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன உரிமையாளர் பாலமேட்டுபுதூரை சேர்ந்த கனகராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்