SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா ஏரியாவில் இருந்து ஆபீசுக்கு தினம் வந்து கொடைச்சல் கொடுக்கும் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-04-10@ 00:34:49

‘‘அரசு ஒப்பந்த பணியில் கமிஷன் அள்ள ஐடியா கொடுக்கும் அந்த சீனியர் சிட்டிசன் யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழக கூட்டுறவு துறை அலுவலகங்களில் உயரதிகாரிகளின் செல்வாக்கில் ஓய்வுபெற்ற பலரும் இன்னும் பணியில் இருக்காங்க. அதுல சென்னையில் உள்ள டியுசிஎஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 2003ம் ஆண்டே ஓய்வு பெற்ற ஒருவர் தற்போதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறாராம். இப்போது அவருக்கு 75 வயது. இவர் தலைமை அலுவலக கொள்முதல் பிரிவில் உள்ளார். இவர்தான், உயர் அதிகாரிக்கே பொருட்கள் கொள்முதல் செய்வதில் அதிக கமிஷன் எப்படி கிடைக்கும் என்று ஐடியா கொடுக்கிறாராம். மேலும், இவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இவர் தொடர்ந்து பணிக்கு வருவதால் மற்ற ஊழியர்கள் அச்சத்தில் இருக்காங்க.. 55 வயதுக்கு மேலே யாரும் பணிக்கு வரக்கூடாது என்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுப்பு அளித்து ஓய்வில் இருக்க சொல்லி இருக்கின்றனர். ஆனால் கமிஷன் அள்ளும் ஆசையில் இவர் 75வயது ஆனாலும், கொரோனா தாக்குதல் பகுதியில் இருந்தாலும் கவலைப்படவில்லையாம். ஆனால் கூட்டுறவு பதிவாளர், கூட்டுறவு துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை மட்டுமல்ல, ஓய்வு பெற்ற பிறகும் கூட்டுறவு துறையில் பணியாற்றும் வயதானவர்களுக்கு கொரோனா தொற்று நோய் பரவும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... அந்த சீனியர் சிட்டிசனோ... எனக்கு ஓய்வா... இதுதான் ‘நல்ல டைம்’ என்று சொல்லி சிரிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அழைக்கக் கூடாது என்ற உத்தரவை மீறி அவர்களுக்கு தொல்லை கொடுத்து பணிக்கு வரச் சொல்லும் அதிகாரி யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அத்தியாவசிய பணிகள் கொண்ட துறையானாலும் அலுவலகம் வர தேவையில்லை என்று அரசு கடந்த மாதம் இறுதியில் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை வேலூர் ஒன்றிய அலுவலகத்தில் அப்பட்டமாக மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஏறத்தாழ 20 கி.மீ தொலைவில் இருந்து 80 சதவீதம் ஊனம் உடைய மாற்றுத்திறனாளி ஒருவர் பணிக்கு வந்து செல்கிறாராம்.
அரசின் உத்தரவை காட்டி தனக்கு வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டார். அதிகாரிகளும் அரசு உத்தரவின்படி வர வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். ஆனால், அங்குள்ள அலுவலக மேலாளர் ஒருவர், ‘அதெல்லாம் கிடையாது. நீ அலுவலகம் வந்தாக வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துகிறாராம். இதனால் தனக்கான வாகனத்தில் 20 கி.மீ தொலைவில் இருந்து அலுவலகத்துக்கு பணிக்கு வந்து செல்கிறாராம். இதையறிந்து பிடிஓ, மேலாளரிடம் எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லையாம். இதனால் சிரமத்துக்குள்ளாகும் மாற்றுத்திறனாளியின் நிலையை அறிந்து சக ஊழியர்கள் நேரிடையாகவே மேலாளரிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தமிழகமே கொரோனா பதற்றத்தில் இருக்கும்போது ஓய்வு பெறுவதில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்று நிதி ஒதுக்காமல் மருத்துவமனை டீன் தன்னை மட்டும் தற்காத்து கொள்வது சரியா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் கடந்த வாரம் ஓய்வு பெற்றார். இது கொரோனா காலம் என்பதால், 2 மாதம் பணிக்காலத்தை அரசு நீட்டிப்பு செய்திருந்தது. ஆனால் திடீரென்று இவரை சில தினங்கள் முன் சென்னைக்கு அரசு மாற்றி இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் இருந்து வரும் இந்நேரத்தில், தேனி மருத்துவக் கல்லூரியில் 49 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பணியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். பணி நீட்டிப்பு பெற்ற டீனோ, கொரோனா வைரஸ் தாக்குதல் சம்பந்தமாக எந்த நிதியையும் விடுவிக்காமல், மருத்துவ பணியாளர்களுக்கு எந்த வசதியும் செய்து தராமல் இருந்துள்ளார். இதனால் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் அவரவர் சொந்த பணத்தை செலவழித்து தங்களுக்கான கையுறை, முகக்கவசம் என அத்தனையும் வாங்கி இருக்கிறார்கள். இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதன்பேரில் மருத்துவமனையின் ஒட்டுமொத்த டாக்டர்களும் சேர்ந்து மருத்துவத் துறை மேலிடத்திற்கு புகார் தெரிவித்திருக்கிறார்கள். டீன் மீதான எதிர்ப்புணர்வு மருத்துவமனையில் பெருகிய நிலையில், இந்த கொரோனா தொற்று தடுப்பு நேரத்தில் ஏதாவது ‘ஸ்டிரைக்’ வந்து விடுமோ என்ற அச்சத்திலும், அரசு தேனி மருத்துவக் கல்லூரி டீனை அதிரடியாக இடம்மாற்றி சமாளித்திருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு பைசா முதலீடு இல்லாமல் ரூ.80 லட்சம் லாபம் பார்த்தவரை பற்றி சொல்றேன்னியே.. அது என்ன மேட்டர்..’’
 ‘‘கோவை ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைக்குள், சிவமான பெயர் கொண்ட ஆளும்கட்சி விசுவாசி ஒருவர் அத்துமீறி புகுந்து சரக்குகளை அள்ளிச்சென்று விட்டார். கள்ளச்சந்தையில் விற்பனை ெசய்து, ஒரே வாரத்தில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் காசு பார்த்து விட்டார். அதாவது, 100 ரூபாய் மதிப்புள்ள சரக்கு பாட்டில் ஒன்றை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தி விட்டார். இப்படியாக கோடியை தாண்டிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் டாஸ்மாக் பெண் அதிகாரி ஒருவர் அங்கு ஆய்வுக்கு சென்றார். ஆளும்கட்சி விசுவாசியை மடக்கி விசாரணை நடத்தினார். அப்போது அவர் ரூ.50 லட்சம் பணத்தை கையில் கொடுத்து போயிட்டு வாங்க மேடம் எனக்கூறி அனுப்பிவிட்டார். மீதமுள்ள 80 லட்சம் ரூபாயை தனது பாக்கெட்டில் ேபாட்டுக்கொண்டார். ஒரு பைசா முதலீடு போடாமல், ஒரே வாரத்தில் 80 லட்சம் ரூபாயை தட்டிச்சென்று விட்டாரே என அதிமுகவினரே மலைத்துப்போய்விட்டனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்