SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய் தொற்றிலும்பிரிவினைவாதம் பேசுவதா?: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கண்டனம்

2020-04-10@ 00:03:25

சென்னை: நோய் தொற்றிலும் கூட பிரிவினைவாதம் பேசுவதற்கு தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.   தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா நோய் பரவலை, நம்நாட்டில் மத ரீதியாகக் கொண்டு செல்ல ஒருதரப்பு விஷம பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறது. சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடில்லாமல்தான் நோய் பரவுகிறது. வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் மீது தவறான பிம்பத்தை தோற்றுவிக்கிறார்கள்.  இஸ்லாம் மக்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இந்து சமுதாய மக்கள் இருக்கிறார்கள்.

டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த இஸ்லாமியர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டார்கள். நோய் தொற்றிலும் பிரிவினைவாதம் பேசுவது கண்டிக்கத்தக்கது. மனம் வருந்தச் செய்கிறது.  ‘சாதி, மத ரீதியாகப் பேசக்கூடாது’ என்று நாட்டின் பிரதமர்தான் அறிவுறுத்த வேண்டும். பிரதமர் மோடி தவறு செய்கிறார். இந்த நேரத்தில், தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியதாக இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்