SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை, ஜஸ்வந்த்பூர், ஹவுராவில் இருந்து சென்னைக்கு 14ம் தேதி வரை சிறப்பு சரக்கு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

2020-04-10@ 00:03:17

சென்னை: மும்பை, ஜஸ்வந்த்பூர், ஹவுராவில் இருந்து சென்னைக்கு வரும் 14ம் தேதி வரை தினம்தோறும் சரக்கு ரயில் இயக்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மும்பையில் இருந்து சென்னை  சென்ட்ரலுக்கு தினசரி சரக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 00115 14ம் தேதி வரை 7 முறை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், இரவு 7.35 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, கல்யாண், லோனாவால, புனே, ஜோலாப்பூர், வாடி, குண்டக்கல், ரேணிகுண்டா வழியாக சென்னைக்கு வந்தடையும். இதேபோல் சென்னையில் இருந்து சிறப்பு சரக்கு ரயில் 00116 இன்று முதல் 14ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் 4 முறை இயக்கப்பட உள்ளது. இதற்கான பதிவுகள் தொடங்கியுள்ளது.

இதேபோல், ஜஸ்வந்த்பூர்- ஹவுராவுக்கு சென்னை வழியாக 8 சரக்கு ரயில் இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில், மதியம் 12 மணிக்கு ஜவந்த்பூரில் தொடங்கும் ரயில் சென்னையை மாலை 6.30க்கு வந்தடையும். மேலும், ஹவுராவில் இருந்து ஜஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் சரக்கு ரயில் சென்னைக்கு மாலை 3.30 மணிக்கு வந்தடையும். இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்