SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டுகொள்ளப்படாத வேளையிலும் எகிறிய தங்க விலை!! : 20 நாட்களில் சவரன் ரூ.3 ஆயிரம் அதிகரித்து ரூ. 34,640க்கு விற்பனை

2020-04-09@ 17:03:59

மும்பை : தங்கம் விலை 20 நாட்களில் சவரனுக்கு ரூ.3 ஆயிரம் அதிகரித்து விற்பனையாகி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா தொற்று பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. ஊரடங்கால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல் ஆகும்.

தமிழகத்தில் கடந்த 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தான் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன் பிறகு தான் , மத்திய அரசு மறுநாளில் இருந்து ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. ஆனால் சென்னையை பொறுத்தவரையும்,மும்பை, டெல்லி, போன்ற பல்வேறு முக்கிய நகரங்களிலும் 4 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது மார்ச் 20ம் தேதியே கொரோனா அச்சம் காரணமாக தங்க நகைக்கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நிலையில், தங்கத்தின் விலையை நாம் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் ஒரு வேளை ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்து நகைக் கடைகள் திறக்கப்பட்டால் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்று விசாரித்த போது, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய நிலவரத்தின் படி,ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,330 ஆக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 34,640 ரூபாயாக இருக்கிறது. கடந்த 20ம் தேதி ஒரு சவரன் ரூ.31,611 ஆக இருந்தது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை 3000 ரூபாய்  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்