SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

144 தடை உத்தரவை பிறப்பித்த 14 நாட்களில் தமிழகத்தில் 1 லட்சம் பேர் கைது

2020-04-08@ 00:33:17

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 14 நாட்களில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாகவும் 1 லட்சத்து 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். 78 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் ேநற்று வரை மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 14 நாட்களில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக 92 ஆயிரத்து 862 வழக்குகள் பதிவு செய்து, 1 லட்சத்து  2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 78 ஆயிரத்து 240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 27 லட்சத்து 73 ஆயிரத்து 794 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்