SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நட்பு நாடு என்ற அடிப்படையில் மருந்து அனுப்பும் என நம்புகிறேன்; இல்லையெனில் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்...அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

2020-04-07@ 08:32:52

வாஷிங்டன்: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பாவிடில் அதற்கான விளைவை இந்தியா சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த  ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு 3.3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே  நாளில் மட்டும் ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 2 வாரங்களில் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஏற்கனவே கூறியுள்ளார். அதேநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள  இடங்களில், பாதிப்பு எண்ணிக்கை உயர்வது நிற்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப்  நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இந்தியாவிலும்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், மருந்து தேவை அதிகரித்துள்ளது. எனவே,  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கனவே தடைவிதித்தது.
 
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், நான்  பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என  நம்புகிறேன். மருந்தை அனுப்பவிலையென்றாலும், பரவாயில்லை; ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும். ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம்'’ என்றார். மலேரியாவை  குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்தை கொரோனா சிகிச்சைகாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்