SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மாநில முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை

2020-04-07@ 00:37:17

திருமலை: தெலங்கானாவில் 364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரத்து 937 பேர் தெலங்கானா வந்தனர். இதில் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள் 30 பேர், அவர்களுடன் தொடர்புடைய 20 பேர் என மொத்தம் 50 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 1089 பேரில், 172 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மூலம் 93 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதன் மூலம் இன்று(நேற்று) வரை 364 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதித்தவர்களில் 45 பேர் சிகிச்சைக்கு பிறகு  வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது காந்தி அரசு மருத்துவமனையில் 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லிக்கு சென்று வந்தவர்களில் இன்னும் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கும், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் என 3 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களுக்குள் மொத்த பரிசோதனை முடிவுகளும் வந்துவிடும்.

ஊரடங்கு மூலம் தற்போது நாம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி உள்ளோம். இந்த வைரஸ் நம் நாட்டில் உருவானது அல்ல. பிரதமர்  மோடியும் தினந்தோறும் இரண்டு முறை போனில் பேசி வருகிறார். அவரிடம் எனது தரப்பில் இருந்து, ‘‘ஊரடங்கு ஜூன் 3 தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்’’ என தெரிவித்துள்ளேன். ஊரடங்கு ஜூன் 3ம் ேததி வரை அமல்படுத்தினால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகமாக  இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்