SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்திற்கு வந்த சோதனை

2020-04-05@ 02:26:17

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளிலும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்தது. தற்போது ஒவ்வொரு நாளும் எண்ணிக்ைக அதிகரித்தவண்ணம் உள்ளது. தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அதே நேரம் உறுதிப்படுத்தும் பரிசோதனை கருவிகள் (கிட்) குறைவாகவே உள்ளன. தென்மாவட்டங்களை பொறுத்தவரை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் மட்டுமே பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதி அளித்தும் தற்போது வரை பரிசோதனை கருவிகள் வழங்கப்படவில்லை.

கடந்த 29 நாட்களில் 4 ஆயிரத்துக்கும் குறைவான பேருக்கே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 90,000க்கும் அதிகமானோர் கடந்த 15 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை.  தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 14 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

ஆனால், 11 கொரோனா  பரிசோதனை செய்யும் கிட் (கருவி) தான் உள்ளது. இதன்மூலம்தான் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு கிட் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 40 முதல் 60 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும். அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்ப நிலையிலேயே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் குணப்படுத்தி விட வாய்ப்புகள் உள்ளது. முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம். எனவே, கூடுதல் பரிசோதனை கருவிகளை வாங்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி உள்ளதால், அங்கிருந்தும் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குஜராத் நிறுவனம் நீங்கலாக, கூடுதலாக 2 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பரிசோதனை கருவிகளை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. சீனாவில் கொரோனா முழுவீச்சில் பரவிக்கொண்டிருக்கும்போது, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உஷாராக இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து பலர் இந்தியாவுக்கு வரத்தொடங்கியபோதே, முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

‘கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம்’ என்பது போல, தற்போது பரிசோதனை கருவிகள் இல்லாமல் அரசுகள் தடுமாறுவது, கொரோனா பாதிப்பை மேலும் அதிகரிக்கும். எனவே, மக்கள் தேசிய ஊரடங்கு நேரத்தில் மட்டுமல்ல... முடிந்த பின்னரும் கூட சில நாட்கள் வரை, வீட்டிலேயே இருந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்