SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவியை பிடிக்க அரை கோடி கொடுக்க தயாராக இருக்கும் அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-04-05@ 01:39:46

‘‘டாஸ்மாக் மது பாட்டில்களை குடோன், திருமண மண்டபங்கள் என ஒரே இடத்தில் கொட்டி வைத்து எதற்கு போலீஸ் பாதுகாப்பு...’’ என்று கிண்டலாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சும்மா சொல்லக் கூடாது இன்னைக்கு தான் நீ உருப்படியா கேள்வி கேட்டு இருக்கிற... ஒரு போலீஸ் அதிகாரி சக அதிகாரியிடம் பகிர்ந்து கொண்டதை அப்படியே சொல்றேன் கேளு... தமிழகத்தில் ஒரு கோடிக்கும் ேமல் குடிக்கு அடிமையானவர்கள் இருக்கிறாங்க... வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிக்கிறவங்க சில கோடி... சிலர் பார்ட்டி என்ற பெயரில் குடிக்கிறவங்க இந்த வகையில 1 கோடி பேர்னு இருக்காங்களாம்... இதுல சிறு திருட்டு, கொள்ளை, கொலை, வழிப்பறி, பிட் பாக்கெட் அடிக்கிற ஆட்கள் இரவில் குடித்துவிட்டே இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறாங்க.. இவங்களால குடிக்காம போய் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் சிலருக்கு உளவியல் ரீதியிலான தைரியம் மது குடிக்காவிட்டால் வராதாம். இதனால கடைகளை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளை அடிக்கவும் தயங்க மாட்டாங்க என்ற நிலை இப்போது இருக்காம்... இதுக்கு காரணம் மதுவுக்கு அடிமையானது தானாம். அதனால திருடர்கள், கொள்ளைக்காரர்கள் நகைக்கடைக்கு செல்வதை விட டாஸ்மாக் கடைகளை நோட்டமிடுவதுதான் அதிகரித்துள்ளதாம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் அந்த கடைகளை தான் குடிமகன்களிடம் இருந்து காப்பாற்ற டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக இருக்கிறதாம். அதற்காக போலீசார் உதவியுடன் கடந்த சில நாட்களாக கடைகளில் இருந்து மதுபாட்டில்களை இடம் மாற்றம், போலீஸ் பாதுகாப்பு என்று அதிகாரிகள் தீவிரமாக இருக்கிறார்கள்... இதை சொல்லி எதுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்க வேண்டி இருக்கு... அதுவும் கொரோனா பரவல் உள்ள நேரத்தில் என்று தலையில் அடித்துக் கொண்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொரோனாவை வைத்து கட்சியை வளர்ப்பதா என்று மாங்கனி மாவட்டத்துல புகைச்சல் ஏற்பட்டு இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பணிகளை எல்லாத்துறையும் முடுக்கி விட்டிருக்கு. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அடையாளங்களை முன்னிலைப்படுத்தாமல் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுறாங்க. ஆனால் தாமரை மட்டும் இதிலிருந்து கொஞ்சம் தள்ளியே நிக்குதாம். திறந்த ஜீப்பில் ராட்சத வடிவில் கட்சி கொடியை கட்டி, மின்னல் வேகத்தில் தெருக்களில் பறக்குறாங்களாம். நிர்வாகிகள் உதவிகளை வழங்கும் போதே கேமரா வெளிச்சம் கண்ணை மறைக்குதாம். இதெல்லாம் தேவையா என்று ஒரு சாரார் கேட்டால்,   ‘விடுங்கப்பா கட்சியில இருக்கிற 4 பேராவது அதை முன்னிலைப்படுத்தி ஏதோ செய்யுறாங்கன்னு சந்தோஷப்படுங்க. இதையெல்லாம் கண்டுக்காதீங்க’’ என்கிறாராம் முக்கிய நிர்வாகி ஒருவர். மற்ற கட்சிக்காரர்களும் இந்த காட்சியை பார்த்து சிரித்தபடியே போறாங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பரிசு பெயர் கொண்ட மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விருதுநகர்  மாவட்டத்தை தான் பரிசு மாவட்டம்னு சொல்றீயா. அங்க நடக்கிற கூத்தை சொல்றேன். அங்க மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காலியாக கிடக்கு.  மாவட்டத்தில் அதிகமுள்ள பட்டாசு ஆலைகளால் வருவாய் அதிகம் என்பதால், இந்த பணிக்கு எப்போதுமே கடும் போட்டிதான். இதன் காரணமாக, இதற்கு முன்பு பணி நியமிக்கபட்டவர்களிடம், சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்டோர் பெரும் ‘வருவாய்’ பெற்றே, பதவி தந்தார்களாம். இப்போதும் பணி நியமனத்திற்கு ‘பெரும் தொகை’ பேசப்பட்டு வருகிறதாம். இதே மாவட்டத்தில் கோட்டாட்சியராக இருந்த ஒருவர், எப்படியாவது விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடத்தை கைப்பற்ற, 40 லகரங்கள் வரையிலும் கூடுதல் தொகை கொடுத்து காத்திருக்கிறாராம். இதைப்போலவே, விருதுநகரில் இதே பணியில் இருந்து, அன்றைய கலெக்டருடனான மோதல் போக்கில் 4 மாதங்களில் மாறுதல் செய்யப்பட்டவரும் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிலரும் அதிமுக முக்கியப் புள்ளிகளிடம் சில லகரங்கள் முன்பணமாக கொடுத்து விட்டு காத்திருக்கிறார்களாம். மார்ச் மாத துவக்கத்திலேயே மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடம் நிரப்பப்படும் என கூறப்பட்ட நிலையில், அப்போது சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்ததால் பணி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ‘கொரோனா வைரஸ் பரவல்’ காரணமாக ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் பணிநியமன ஆணை பைல் கிடப்பில் உள்ளதாம். இதனால் பல லகரங்களை கொடுத்து விட்டு பணி நியமனத்திற்காக காத்திருப்போர் நொந்து போய் உள்ளனராம். மாவட்டத்தில் ஒரு மாதம் முக்கிய பணியிடம் காலியாக இருப்பதால், மாவட்ட வருவாய் நிர்வாக பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். கலெக்டர் இந்த பணியை கூடுதலாக கவனிக்கிறார். கொரோனா வைரஸ் தடுப்பு பணி, மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு பணி என கலெக்டர் கூடுதல் பணிச்சுமையில் அவதிப்படுகிறாராம்...’’என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்