SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை ஆடிப்பெருக்கு காவிரியில் கரைபுரளும் தண்ணீர

2013-08-02@ 01:36:05

திருச்சி : காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆடிப்பெருக்கை கொண்டாட புதுமண தம்பதிகள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் குறிப்பாக காவிரி ஆற்றில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படும். அன்றைய தினம் புதுமண தம்பதிகள் திருச்சி காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி பூஜை செய்து, மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். அதேபோல் திருமணமாகாத பெண்கள், நல்ல வரன் அமையவேண்டி, பூஜை செய்து மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா நாளை (சனி) கொண்டாடப்பட உள்ளது. தற்போது திருச்சி காவிரி ஆற்றில் கரைபுரள தண்ணீர் ஓடுவதால், ஆடிப்பெருக்கு விழா களை கட்டி உள்ளது. புதுமண தம்பதிகள், பெண்கள் புனித நீராடுவதற்கு உற்சாகத்துடன் உள்ளனர். ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் காவிரிக்கரையில் கூடி, தலைவாழை இலையில் மஞ்சள் கயிறு, பழவகைகள், சர்க்கரை பொங்கல்,

பஞ்சாமிர்தம் போன்ற நைவேத்தியங்கள், கருகமணி, தேங் காய், பால் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். மேலும் மூத்த சுமங்கலி பெண்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள். ஆடி பெருக்கு அன்று திருச்சி காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்புக்காக போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

ஆடி என்றாலே புது தம்பதிகளுக்கு ஏக்கம்தான். ஒரு மாத பிரிவுக்கு ஒரே ஆறுதல் சந்தோஷம் இந்த ஆடிப் பெருக்கு விழாதான்.

sms spy app click spy apps free
prescription coupon card viagra online coupon viagra online coupon
drug coupon card prostudiousa.com drug discount coupons
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்