SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரவை மீறினால்...

2020-04-04@ 00:08:50

கொரோனா தொற்று வேகமாக பரவி  வருகிறது. அதிகம் பாதித்த மாநிலத்தில் தமிழகம் 2வது இடம் பிடித்துவிட்டது. மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துவிட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த விதிமுறைகளை மக்கள் மதிப்பதாக தெரியவில்லை. இருசக்கர வாகனத்தில் 2 பேர், 3 பேராக சுற்றி திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். காய்கறி, மருத்துவமனை, மருந்து வாங்க, திருமணம், இறுதி சடங்கு என்று அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்கு போலீசாரே விசாரித்து அவர்களை செல்ல அனுமதித்து வருகின்றனர்.  ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல், வீட்டில் அடைந்து கிடக்க வெறுப்பாக இருக்கிறது என்று இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு இளைஞர்கள் கூட்டமாக வெளியே சென்று சுற்றுகிறார்கள்.

இவர்களை மடக்கும் போலீசார் அடித்து பார்த்தார்கள். தோப்புகரணம் போடவிட்டு நூதன தண்டனை கொடுத்தார்கள். வாகனங்களை பறிமுதல் செய்தார்கள். இருந்தாலும் ஊரடங்கு விதிகளை மீறும் சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கிறது.  போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ரேஷனில் கொரோனா நிவாரண நிதி 1000 வழங்க தொடங்கிவிட்டார்கள். இதற்காக ஒரு நாளைக்கு 100 கார்டுகள் என்று டோக்கன் கொடுக்கப்பட்டாலும், மக்கள் கடை முன்பு எக்கச்சக்கமாக வந்து கூடிவிடுகிறார்கள். இதனால் சமுதாய இடைவெளி குறைந்து கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
கொரோனா தொற்றின் தீவிரம் அறியாமல், உயிர் மீது அச்சம் இல்லாமல் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் அலட்சியத்துடன் நடந்து கொள்வதால் அரசும், போலீசாரும் திணறி வருகின்றனர்.

இன்னும் எந்த வகையில் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தி கட்டுப்படுத்துவது என்று அவர்களுக்கே தெரியவில்லை. மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவதாக அறிந்த மத்திய அரசு, விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு 51 மற்றும் 60ன்படி இந்திய தண்டனைசட்டம் 188ன் படியும், ஊரடங்கு உத்தரவை மீறுவோர், அதை செயல்படுத்தும் அரசு, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராமல் இருப்போருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கலாம். விதிகளை மீறுவோரால் ஏதேனும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டுவரை சிறை தண்டனை வழங்கலாம்.

அதே போன்று ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிக்கும் தண்டனை வழங்கலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதால், காவல் துறையினர் அடுத்த 10 நாட்கள் தமிழகம் முழுவதும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். எனவே ஊரடங்கின் நோக்கத்தை உணர்ந்து, அநாவசியமாக வெளியில் சுற்றித் திரிவதை தவிர்ப்போம். சமூக விலகலின் மூலம் கொரோனா நோய்த் தொற்றை அறவே ஒழிக்க உதவி புரிவோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்