SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியபாளையம் அருகே பெட்டிக்கடையில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பறிமுதல்

2020-04-03@ 10:02:51

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆரணி பெட்டி கடையில், கள்ளத்தனமாக விற்பனை செய்த டாஸ்மாக் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் கம்மாள தெருவில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே பெட்டி கடை ஒன்று உள்ளது. இந்த கடையில், டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து  விற்பனை செய்வதாக திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன்  மேற்பார்வையில் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஆரணி எஸ்.ஐ. கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு திடீரென  பெட்டி கடையில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, பெட்டிகடையில் இருந்த 180 மில்லி அளவு கொண்ட 552, 375 மில்லி அளவு கொண்ட 93 என 645 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பெட்டி கடையில் மதுபானங்களை பதுக்கி வைத்து  விற்பனை செய்ததாக ஆரணியை சேர்ந்த செந்தில், ரெனால்டு, விஜயன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட மது பானங்களின் மதிப்பு ₹ 90 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்