SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரப்போகும் மோதல்

2020-04-03@ 00:14:44

சண்டையில் அடிபட்டு விழுந்தவர்களில், முதலில் எழுந்தவன் வெல்வான் என்ற பாணியில் இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் முதலில் அடிபட்டு, மிதிபட்டு இப்போது எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டது சீனா. மற்ற நாடுகள் எல்லாம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் மீண்டும் வனவிலங்குகள் இறைச்சி சந்தை முதல் பெரிய ஆலைகள் வரை அனைத்தும் இயங்க ஆரம்பித்துவிட்டன. கொரோனா பிறந்த வுகானில், இந்த ஊரில்தானா பாதிப்பு ஏற்பட்டது என்று நினைக்கும் அளவுக்கு, மிக வேகமாக சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது. இப்போது சிக்கல் என்னவென்றால், எழுந்து நின்ற சீனா, மற்ற நாடுகளை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளதுதான்.

ஆஸ்திரேலியாவில் மிகக்கடுமையாக பொருளாதாரம் வீழ்ந்துள்ளது. அங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவீதம் அளவுக்கு கொரோனா பாதிப்பால் வீழ்ச்சி அடைந்துள்ளது. விளைவு, அனைத்து நிறுவனங்களும் தள்ளாட ஆரம்பித்துள்ளன. குண்டூசி தயாரிக்கும் சின்ன நிறுவனம் முதல், காற்றாலைகளுக்கு ரெக்கைகள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் வரை தள்ளாட ஆரம்பித்துவிட்டன. இதுதான் சமயம் என்று சீனா இப்போது ஆஸ்திரேலிய நிறுவனங்களை விலை பேச ஆரம்பித்துவிட்டது. பல ஆஸ்திரேலிய நிறுவனங்கள் விட்டால்போதும் என்ற நிலையில் இருப்பதால், தங்கள் பங்குகளை சீன நிறுவனங்களுக்கு விற்க தயாராகிவிட்டன. இதுபோன்று சென்றால், ஆஸ்திரேலிய நிறுவனங்கள் சீனா வசம் சென்றுவிடும். அதன்பின்னர் அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.

சுருக்கமாக சொன்னால், வெள்ளையர்கள் இந்தியாவை வாணிபம் மூலம் கைப்பற்றியது போன்ற ஒரு நிலை உருவாக ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பல பொருளாதார நிபுணர்கள் ஆஸ்திரேலிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னர்தான் அதற்கு உறைக்க ஆரம்பித்துள்ளது. அவசர, அவசரமாக சீனாவிடம் தன் நாட்டு நிறுவனங்கள் சென்றுவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக வெளிநாட்டு முதலீட்டு விதிகளில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஆனால், கடும் நஷ்டத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய நிறுவனங்கள், தங்களை காப்பாற்ற வந்த சீனாவை அரசே தடுப்பதாக குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளன. தங்களுடைய நஷ்டத்தை அரசு ஏற்றுக் கொண்டால், நாங்கள் ஏன் சீனாவிடம் நிறுவனங்களை விற்கப்போகிறோம் என்பது அவர்களின் வாதம். அது சரி, ஆடுகள் என்றைக்கும் கசாப்பு கடைக்காரர்களைதானே நம்பும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்