SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு; 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.....பீலா ராஜேஷ்

2020-04-02@ 18:36:22

சென்னை: தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனவும் கூறினார். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 மணி நேரத்தில் மேலும் 328 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் உயிர்கொல்லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2113 ஆகவும், பலி எண்ணிக்கை 62 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;

* டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

* வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 9000 என அதிகரித்து உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 86,432 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேற்று 77,000-ஆக இருந்த வீட்டுக் கண்காணிப்பு, 86,342-ஆக அதிகரித்து விட்டது.

* தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
எஞ்சிய ஒருவரும் டெல்லி சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்.

* டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 1,103 பேருக்கும் சோதனை முடிந்து விட்டது. இன்னும் சிலருக்கு சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா பாதித்த 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

* கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்