SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்புக்காக மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம்: பல்வேறு சலுகைகளை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

2020-04-02@ 18:04:33

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும்: முதல்வர்  பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் உற்பத்தி செய்ய தொடங்கினால் 100 % முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

உலகத் தொற்று நோயான கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தொடர்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தியை தமிழ்நாட்டில் மேற்கொள்ள தொழில் நிறுவனங்களை
ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகளை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி;

1. கொரோனா நோய் தடுப்புக்கான கீழ்க்காணும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களின்
உற்பத்திக்கு சலுகைகள் வழங்கப்படும்.

i. உள் நுழைவு செயற்கை சுவாசக் கருவிகள்
ii. சூ-95 முகக் கவசங்கள்
iii. கொரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் – ஹைட்ராக்சிக் குளோரோ குவினோன், அசித்ரோமைசின் வைட்டமின்-சி

2. மேற்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள
நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31, 2020-க்குள் புதிதாக உற்பத்தி செய்யத்
துவங்கினால், சலுகைகள் வழங்கப்படும்.

3. குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும்.

4. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, மொத்த மூலதனத்தில் 30 சதவீதம் மூலதன மானியம், 20 கோடி ரூபாய்
உச்சவரம்பாகக் கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாக பிரித்து வழங்கப்படும்.

5. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறப்பு தொழில்
நிறுவனங்களாக கருதப்பட்டு, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சலுகைகளும் வழங்கப்படும்.

6. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களும் திட்ட அனுமதி உட்பட அனைத்து
வித அனுமதிகளும் பெறுவதற்காக காத்திருக்காமல் உடனடியாக உற்பத்தியை துவக்கலாம். உற்பத்தி துவக்கிய
பின்னர் அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்திற்கும் ஒற்றைச்சாளர அனுமதிகள் வழங்கப்படும்.

7. மேற்படி தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப குறுகிய கால அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம் / கூடாரங்கள் வழங்கப்படும்.

8. 100 சதவீத முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும்.

9. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் செயல்பாட்டு மூலதனக் கடனிற்கான வட்டியில் 6 சதவீதத்தை இரண்டு காலாண்டுகளில் (31.12.2020 வரை) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
மூலம் மானியமாக அரசு வழங்கும்.

10. மேலும், அடுத்த நான்கு மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளில்,
குறைந்தபட்சம் 50 சதவீதத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்யும். இதற்கென திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

11. இத்திட்டத்தின்படி உற்பத்தி துவக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில்
முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்குவதற்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.

12. பெரு நிறுவனங்களுக்கு சிப்காட் நிறுவனமும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வணிக ஆணையரகமும் இச்சலுகைகளை வழங்குவதற்கான முகமை நிறுவனங்களாக செயல்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்