SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா எதிரொலி: ஒத்திவைக்கப்பட்ட கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு

2020-04-02@ 16:42:21

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி ஆன்லைனில் பாடம் நடத்த கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஐந்து நாள்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது சர்வதேச மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் வைரஸ் தாக்குதலில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இதுவரை கொரோனா வைரசால் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். 151 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ்  பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கல்லூரி நிறுவனங்களும் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆன்லைனில் பாடங்களை நடத்தி முடிக்க சென்னை பல்கலை கழகம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்