SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதும் 202 நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆயிரத்தை கடந்தது

2020-04-02@ 06:44:23

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 47,189 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 935,189 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 193,989 பேர் குணமடைந்தனர். மேலும் 35,478 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,428 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110,574 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,387ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104,118-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 8,195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215,003-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,049 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,014 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.  பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,032  அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 3,036 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சீனாவில் 81,554 பேருக்கும், ஜெர்மனியில் 77,981 பேருக்கும், பிரான்சில் 56,989 பேருக்கும் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்