SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக கடமை

2020-04-02@ 00:09:30

கொரோனா வைரஸ் படுத்தும்பாடு பெரும்பாடு. தப்பிக்க ஒரே வழி ஒவ்வொருவரும் தனிமைபடுத்தப்படுவதுதான். அரசு ஏப்ரல் 14 வரை ஊரடங்கை அமல்படுத்தி
தனிமைப்படுத்தி இருக்கிறது. அதற்கு ஒத்துழைப்பதுதான் நமக்கு நாமே செய்யும் உதவி. அதை அலட்சியம் செய்வது ஆபத்தில் முடிந்துவிடும். கொரோனா டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கினாலும் மற்ற நாடுகளுக்கு அதன் தாக்கம் ஜனவரியில் தான் தொடங்கியது. டெல்லியில் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை நிஜாமுதீன் பகுதியில் தப்லிக் ஜமாத் மத நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தாய்லாந்து, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 300க்கும் மேற்பட்ட மதகுருமார்கள் இதில் பங்கேற்றனர்.

மார்ச் 13 முதல் 19 வரை டெல்லியில் இருந்து மாநாடு முடிந்து 5 ரயில்களில் இவர்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ஏராளமானோருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை இந்த மதநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் 10 பேர் வரை பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 1500 பேர் இந்த மதநிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அவர்களில் 1131 பேர் மட்டும் தமிழகம் திரும்பியுள்ளனர். அவர்களில் 515 பேர் யார் என்பது தெரிந்து விட்டது. மீதம் உள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 67 பேருக்கு கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மூலம் தமிழகத்தின் பல நகரங்களில் கொரோனா பரவியிருப்பது தெரிய வந்துள்ளது.

நிச்சயம் மதநிகழ்ச்சிக்கு போய் வந்தவர்களுக்கு கொரோனா தாக்கியிருக்கும் என்பது தெரியாது. 14 நாட்கள் கழித்தபின்னரே அதன் அறிகுறிகள் தெரியவரும். அப்படி தெரிந்தால் யாரும் வீட்டிற்கு சென்று இருக்க மாட்டார்கள். தாங்கள் மட்டுமல்ல தங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் இதன் தாக்கத்தில் பாதிக்கப்பட யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே அரசு கண்டுபிடிக்க முடியாத மற்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்படி செய்யும்பட்சத்தில் மதநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மட்டுமல்லாமல், அவர்களது ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் அவருடன் நெருங்கி பழகிய மற்ற அனைவரையும் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் கோரிக்கையை ஏற்று பலர் தாமாக முன்வந்து கொரோனா சோதனைக்கு நேற்று உட்படுத்தினர். இதுவும் அவர்களது சமூக கடமை தானே. முன்வந்து சோதனை செய்த அனைவருக்கும் பாராட்டுகள். மற்றவர்களும் விரைந்து வந்து கொரோனா சமூக பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் இது நாம் அனைவரும் ஒன்றுபட்டு தடுக்க வேண்டிய தருணம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்