SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிராவில் ஒரே நாளில் பாதிப்பு கிடுகிடு உயர்வு

2020-04-02@ 00:04:32

புதுடெல்லி: டெல்லியில் நடந்த தப்லிஹ் மாநாட்டில் கேரளாவில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. முதற்கட்ட மாநாட்டில் கலந்து கொண்ட 160 பேரையும் கண்டுபிடிக்கும் பணியில் கேரள போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இறங்கி உள்ளனர். 2வது கட்ட மாநாட்டில் கலந்து கொண்ட 150க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கேரளா திரும்பவில்லை. பாதிப்பு தொடர்பாக ேகரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில்  இன்று (நேற்று) ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. இன்று(நேற்று) நோய் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர்  பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

மீதி உள்ளவர்கள் அவர்களுடன்  தொடர்பில் உள்ளவர்கள். கேரளாவில் இருந்து தற்போது தினமும் 50,000 லிட்டர் பாலை வாங்கி கொள்வதாக தமிழகத்தின் ஆவின் தெரிவித்துள்ளது’’ என்றார். இதேபோல், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லியில் நடைபெற்ற மத  வழிபாட்டில் ஆந்திராவில் இருந்து 1085 பேர் சென்று வந்துள்ளனர். இதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 21 பேரை தேடி வருகிறோம்’’ என்றார். மகாராஷ்டிராவில்  நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி  செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் நேற்று மட்டும் 9 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாததால் வழக்கு
நாட்டிலேயே முதல் முறையாக முகக்கவசம் அணியாததற்காக நாசிக்கில் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாசிக்  மாவட்டம், நிபாட் தாலுகாவில் உள்ள டோங்கர்காவ் என்ற ஊரைச் சேர்ந்த  பாண்டூரங் தத்து என்பவர் நேற்று ஊரடங்கை மதிக்காமல் சாலையில் நடமாடிக்  கொண்டிருந்தார். அவரை போலீசார் வழிமறித்து விசாரித்த போது வீட்டை விட்டு  வெளியே வந்தததற்கான சரியான விளக்கத்தை அவரால் கூறமுடியவில்லை. அவர்  முகக்கவசமும் அணிந்திருக்கவில்லை. இதனால், அரசு உத்தரவை மீறிய  குற்றத்துக்காக அவருக்கு எதிராக இ.பி.கோ. 188வது பிரிவில் வழக்குப் பதிவு  செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் 2 பேர் பலி
* கேரளாவின் பத்தனம்திட்டாவை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமெக்காவின் நியூயார்க் நகரில் சப்-வேயில் பணிபுரிந்து வந்தார். இவர் கொரோனாவால் நேற்று முன்தினம் இறந்தார். இதேபோல அமெரிக்காவில் வசித்து வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரும் பலியாகி உள்ளார்.
* ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி சபரிமலையில் சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஒரு வாரத்துக்கு கோயில் நடை திறந்திருக்கும். இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
* கேரளாவில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி கலால் துறை பாஸ் உடன் வருபவர்களுக்கு வீடுகளுக்கே மதுவை டோர் டெலிவரி செய்ய மதுபான விற்பனைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டிலேயே இருங்கள் அருணாச்சல் போலீஸ்காரரின்மகள் வேண்டுகோள்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டரில் 9 வயது சிறுமியின் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனது தந்தை போலீஸ்காரர். உங்களுக்கு உதவுவதற்காக அவர் என்னை விட்டு பிரிந்து சென்றுள்ளார். நீங்கள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருந்து, அவருக்கு உதவி செய்யுங்கள்’ என கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘இந்த குட்டி சிறுமியின் வேண்டுகோள் உருக்கமானது ஆனால், அருமையான தகவல். நமது பாதுகாப்புக்காக பணியாற்றும் போலீசாரை பாராட்ட வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை நெட்டிசன்கள் பலர் பாராட்டியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்