SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு

2020-04-02@ 00:03:39

டெஹ்ரான்: ஈரானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்கு 3,036 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 47,593 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதும், அதன் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மத்திய மற்றும் தென் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு பிராந்தியங்களிலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரக்கால சேவைகள் துறையின் தலைவர் கலெதி தெரிவித்துள்ளார். மேலும், 22 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளதாகவும் கூறினார். மேலும், சில நாட்களுக்கு மழை நீடிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்