SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் அவகாசம்; உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தவும் 3 மாதம் அவகாசம்: தலைமைச் செயலாளர் சண்முகம்

2020-03-31@ 18:01:24

சென்னை: பாதுகாப்பு உடை இல்லாமல் எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்க கூடாது என்று தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 17,000 படுக்கைகள் தயாராக உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது;

* கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம்.

* மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்த 3 மாதம் அவகாசம்.

* உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்.

* கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்த ஜூன் 30 வரை காலஅவகாசம்

* வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு.

* வீட்டு வசதி வாரியத்துக்கு தவணை செலுத்தவும் அவகாசம் நீட்டிப்பு.

* கொரோனா பாதித்தவர்கள் வீட்டை சுற்றி 8 கிமீ சுற்றளவுக்கு வீடு வீடாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* சிப்காட் நிறுவனத்தில் தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3  மாதம் அவகாசம்.

* மூச்சுத்திணறலுக்காக தனியார் மருத்துவமனைக்கு யாராவது வந்தால் தகவல் தெரிவிக்க உத்தரவு.

* கொரோனா பாதித்தவர்களில் 100-ல்  2 பேருக்குத்தான் அதிதீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

* பரந்த வெளியில் காய்கறி, மீன் இறைச்சி கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 * வீட்டு வாடகை தொகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.

* பாதுகாப்பு உடை இல்லாமல் எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்கக்கூடாது.

* மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் உள்ளன.

* தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான 17,000 படுக்கைகள் தயராக உள்ளன.

* கொரோனவுக்காக நாளை முதல் கூடுதலாக 6 பரிசோதனை மையம் செயல்படும்.

* மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்ட்டுள்ளன.

* வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதிச் சான்றுகளை புதுப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம்.

* கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே சளி சோதனை நடத்தப்படுகிறது.

* மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் ஒரு மாத வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது; முதல்வர் ஒருபடி மேலே போய் இரண்டு மாத வாடகையை காலம் தாழ்த்தி வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்