SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம்... நிரந்தரம்

2020-03-31@ 00:09:31

கோர தாண்டவமாடி வரும் கொரோனா வைரஸ், தினமும் உயிர்களை பலி கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கொரோனா வைரஸ், அதனை சமாளிக்கும் விதம் குறித்த முழுமையான தகவல்களை சீனா வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் பல நாடுகளில் பலி எண்ணிக்கையும், பரவலும் மின்னல் வேகத்தில் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்கம் எப்படி இருக்கும், அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி, மனித உடலில் புகுந்து எவ்வாறு தாக்கத்ைத ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கொரோனா மருந்து கண்டுபிடிப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இன்றைய தேதியில் உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முன்பு இருக்கும் பெரிய பிரச்னை, கொரோனாவை முறியடிக்க மருந்து கண்டுபிடிப்பதுதான். நமது கைவசம் இருக்கிற சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை கொரோனாவுக்கு எதிராக களமிறக்கிப் பார்க்கலாம். வெற்றி கிடைக்க வாய்ப்புகள் மிக அதிகம். பாரம்பரிய மருந்துகள் பெரும்பாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்பதால், கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி முயற்சிகளை துவக்கலாம். இந்த முயற்சியில் நாம் வெற்றி கண்டால் உலக அரங்கில் நமது பாரம்பரிய மருத்துவத்திற்கு மிகப்பெரிய பெருமை கிடைக்கும். இதற்கு முன்பும் டெங்கு உள்ளிட்ட பெரு நோய் தாக்குதல்களின் போது சித்த மருத்துவம் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறும் உயிர்காக்க பெருந்துணை புரிந்துள்ளன என்பதை மறந்து விடக்கூடாது.

கொரோனா வைரஸ் பிரச்னைக்குப் பிறகு தமிழகத்தில் சிறுதானியம், மஞ்சள், வேப்பிலை உள்ளிட்ட பாரம்பரிய விஷயத்திற்கு மக்கள் திரும்பியுள்ளது வரவேற்க வேண்டிய விஷயம். துரித உணவுகளை தவிர்த்து எப்போதும் நமது மண் சார்ந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. எனவே பாரம்பரிய உணவுகளை ‘குறுகிய கால உணவு’ பட்டியலில் சேர்த்து விடவேண்டாம். ஏதாவது கொடிய நோய் பாதிப்புகளின் போது மட்டுமே பாரம்பரிய உணவு பக்கம் பார்வையைத் திருப்புவதை கைவிட்டு, அதை நமது தினசரி பழக்கமாக்கிக் கொண்டால், ஆரோக்கியம்... நிரந்தரம்.

தனி மனித சுகாதாரத்தையும் ஒவ்வொருவரும் கடைபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது. அரசு தெரிவிக்கும் விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும். 136 கோடி மக்கள் உள்ள நமது நாட்டில் 90 சதவீத மக்கள் ஊரடங்கை கடைபிடித்து, 10 சதவீத மக்கள் அலட்சியப்படுத்தினாலும் ஆபத்து தான். காரணம், அந்த 10 சதவீதம் பேர், எஞ்சிய 90 சதவீதம் பேரின் வைரஸ் பரவலுக்கு வழிவகை செய்து விடும் அபாயம் உள்ளது. அரசின் உத்தரவுகளை கடைபிடித்து கொரோனாவை விரட்டி உலகிற்கு வழிகாட்டுவோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்