SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடூர பாடம் தேவையா?

2020-03-30@ 00:13:03

கொரோனா பரவலின் அபாயகரமான 3ம் கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது என்று எச்சரித்துள்ளார் இந்திய தர மேலாண்மை கவுன்சிலின் பொதுசெயலாளர் கிரிதர் கியானி. இந்த எச்சரிக்கையின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை புரிந்து கொள்ளாத மக்கள் தினமும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடமாடுவதை பார்க்க முடிகிறது. அசுரகரத்தை பரப்பியுள்ள கொரோனாவிலிருந்து தப்பிக்க சமூக விலகலே முதல் மருந்து என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்து ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆனால் அதன் நோக்கத்தை சிதைத்து வருகின்றனர் பலர்.

ஊரடங்கினால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் நிலையங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த வேளை உணவை எண்ணி கவலைப்படும் மக்கள் கூட்டம் இந்த கடைகளை தேன் வண்டாய் மொய்க்கிறது. பலர் வீட்டிலுள்ள பழைய மருந்து சீட்டுகளை எல்லாம் தூசு தட்டி பையில் வைத்துக் கொண்டு ஜாலி உலா போகின்றனர். கடைகளில் சமூக விலகல் வட்டம் போட்டிருந்தாலும் அந்த வட்டத்திற்குள் பலர் அடைபட மறுக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் பலன் இல்லை.

இந்நோய் தொற்றிய 10-ல் ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும், ஆனால் அவர்கள் மூலம் பிறருக்கு நோய் பரவும் வாய்ப்பும் அதிகம் என்பதாலேயே சமூக விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை பொழுதுபோக்காக மாற்றி விட்டதாக பிரதமர் வருத்தப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. நோய் பரவலை விட அது குறித்த அச்சம்தான் அதிகம் பரவி வருகிறது. இதனால் வெளிமாநிலங்களிலிருந்து இங்கு பிழைப்பு தேடி வந்த பலரையும் கண்டு மக்கள் அஞ்சத் துவங்கியுள்ளனர். மொழி புரியா மண்ணில் தவிப்பதைவிட சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று அவர்கள் புறப்பட்டாலும் செல்ல முடியாத நிலை நிலவுகிறது.

இது பிக்னிக்கிற்கான நேரம் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்காத அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாய் மடிவது நம் ஒவ்வொருவருக்கும் பெரும் படிப்பினை. தனித்திருப்பதையும், கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதும், ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிபடுத்தியும், சுயக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கத் தேவையான விழிப்புணர்வுடன் இருப்பதையும் உறுதிப்படுத்த முன்வர வேண்டும். சமூக விலகலே நம் கடமை என்ற மூன்றெழுத்தில்தான் உயிர் மூச்சு அடங்கியிருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்