SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலாளர்களுக்கு உதவுங்கள்: தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

2020-03-29@ 00:49:27

வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், தினக் கூலிகள் டெல்லியில் இருந்து காஜியாபாத் நோக்கி நடை பயணமாக செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தனது டிவிட்டரில், `இன்று நூற்றுக்கணக்கான நமது சகோதர, சகோதரிகள் பசியுடனும், தாகத்துடனும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில், அவர்கள் உங்கள் நகரையோ, கிராமத்தையோ கடக்க நேர்ந்தால், முடிந்தவர்கள் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் கொடுத்து உதவுங்கள். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும்படி காங்கிரஸ் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். தொழிலாளர்களை தவிக்க விட்டதாக வந்த புகார்களை தொடர்ந்து உபி அரசு அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்க நேற்று 1000 பேருந்துகளை இயக்கியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்