SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் விமான சேவை முழுமையாக நிறுத்தம்

2020-03-27@ 01:49:33

மாஸ்கோ: உலகை தன் கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவின் அச்சுறுத்தலினால் ரஷ்யாவில் 3 பேர் பலியான நிலையில், ஏறக்குறைய 800  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில், `‘கொரோனா வைரஸ் தாக்குதலைக்  கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவு (நேற்று) முதல் வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்படுகிறது. இதில் இருந்து அரசு  விமானங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விதிகள் உள்நாட்டு விமான சேவைக்கு பொருந்தாது.

வெளிநாடுகளில் தங்கி இருக்கும் ரஷ்யர்களைத் திருப்பி அழைத்து வருவதற்கான விமானங்கள் மட்டும் இயக்கப்பட உள்ளது. அந்த நாடுகள்  ரஷ்யர்களை திரும்பி அனுப்ப தடை விதித்திருந்தால், அவர்கள் அந்நாட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள்  தங்களை மருத்துவ பரிசோதனைக்கும் இரண்டு வாரம் தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தி கொள்ள வேண்டும்’' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்