SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேஷன்கார்டுகளுக்கு ஏப்.2 முதல் தலா 1000: தமிழக அரசு அறிவிப்பு

2020-03-27@ 01:41:27

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 15ம் தேதி வரை 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000  நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 1.94 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய்  வழங்குவதற்காக 2014 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரமும், சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்க 173 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம்  2,188 கோடி நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய்  மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘ஏப்ரல்  2ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் ேததிக்குள்  விநியோகம் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலை கடை பணியாளர்கள் அனைவருக்கும் மேற்படி காலத்திற்கு நாளொன்றிற்கு 200 பயணம் மற்றும் இடை நிகழ்ச்  செலவினமாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் அனுமதிக்க வேண்டும். அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் தேவையான முகக்கவசங்கள்  மற்றும் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் தேவையான கிருமி நாசினிகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சங்கங்கள் கொள்முதல் செய்து வழங்க  வேண்டும். இதை கூட்டுறவு பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்ள் மற்றும் அனைத்து கூட்டுறவு மொத்த  விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்