SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் அனைத்து தேநீர் கடைகள் மூடல்: கடை உரிமத்தை புதுப்பிக்க கால நீட்டிப்பு தர வேண்டுகோள்

2020-03-26@ 17:57:46

சென்னை: கொரோனா தொற்று எதிரொலியாக சென்னையில் அனைத்து தேநீர்  கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அந்த தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் உரிமம் பெற்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேநீர் கடைகள் உள்ளன. இவைகள் அனைத்தையும் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளதால் சுமார் 15-ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உதவ வேண்டும் என்று தேநீர் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ம் தேதிக்குள் தேநீர் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் கொரோனா பரவுவதால் எப்.14-ம் தேதி வரை அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருக்கும். எனவே உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சென்னை பெருநகர தேநீர் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்