SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாசிக் மொத்த சந்தையில் ஏலம் நிறுத்தம்: வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது

2020-03-26@ 01:06:16

நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையிலில் வெங்காயம் ஏலம் விடுவது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் விலை மீண்டும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தை, நாசிக்கின் லாசல்காவில் உள்ளது. இங்கிருந்து மகாராஷ்டிராவின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் வெவ்வேறு மாநிலங்களுக்கும் வெங்காயம் சப்ளை செய்யப்படுகிறது. அதேபோன்று அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகும் வெங்காயம் இங்கு ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக் லாசல்காவ் சந்தையில் வெங்காயம் ஏலம் விடுவது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளுக்கும் பக்கத்து மாநிலங்களுக்கும் வெங்காயம் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதால் மீண்டும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்