SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரும் சவாலாக மாறிய கொரோனா: தமிழகத்தில் மதுரையில் முதல் பலி; இந்தியளவில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

2020-03-25@ 07:24:08

மதுரை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 18,887  பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலியாகும். தங்களால்  முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்று மாலையிலிருந்து அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவை  இருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. எனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்