SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி : தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

2020-03-24@ 13:58:28

சென்னை : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல் படுத்துகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.

அதில், “அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா  தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 வயது முதியவருக்கும், 52 வயது பெண்ணுக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயதான பெண்ணுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகமாக இருக்கக்கூடிய நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்

கடந்த 28ம் தேதி ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 45வயது இளைஞர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டாவதாக டெல்லியில்  இருந்து ரயில் மூலம் சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கும், நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயதுடைய முதியவருக்கும், தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த 65 வயது மற்றும் 75 வயதுடைய இரண்டு முதியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஸ்பெயினில் இருந்து டெல்லி, பெங்களூரு வழியாக கோவை வந்த 32 வயது பெண், துபாயில் இருந்து மதுரை வந்த 43 வயதுடைய ஆண், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 64 வயதுடைய பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு ெகாரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். லண்டனில் இருந்து சென்னை வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞர், லண்டனில் இருந்து திருப்பூர் வந்த 48 வயதுடைய ஆண், மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஆகிய மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரும் சென்னை ராஜிவ்காந்தி, திருப்பூர் இஎஸ்ஐ, மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்லாதவர். அப்படியிருந்தும் அவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் உள்ளூரிலேயே நோய்த் தொற்று இவருக்கு ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. இவரது உடல்நிலை தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்