SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்வு; இந்தியாவில் இதுவரை 476 பேர் பாதிப்பு

2020-03-24@ 07:34:32

டெல்லி: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வருகிறது. இதுவரை 3, 78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி  16,503 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசுக்கு 476  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் தோன்றிய சீனாவை பின்னுக்கு தள்ளி தற்போது இத்தாலி கொரோனா பாதிப்பில் முன்னிலை வகிக்கிறது. இங்கு  நேற்று முன்தினம் ஒரேநாளில் 651 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் பலி எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக  5,560 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,927 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 3,277 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 5,560 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,171 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 2,311 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 3272 பேரையும்  சேர்த்து மொத்தம் 35,136 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதேபோல் ஈரானில் இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை 1,812 ஆக  அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,049 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 552 பேர்  உயிரிழந்துள்ளனர். 43,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் பலி எண்ணிக்கை 860 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 19, 856 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். 29,056 பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 335 பேர் உயிரிழந்துள்ளனர். 6,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,887 பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். 3,743 பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 42 பலியாகியுள்ளனர். 1,1128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 6 பேர் பலியாகியுள்ளனர். 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 2 பேர் பலியாகியுள்ளனர். 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவூதியில் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் பலியாகவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்