SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைந்த மின்சார பயன்பாட்டு ஃபிரிட்ஜ்

2020-03-12@ 14:22:42

நன்றி குங்குமம் முத்தாரம்

மின் தட்டுப்பாடு உள்ள வெப்ப நாடுகளில், உணவுப் பொருட்களைப் பாதுகாக்க ஃபிரிட்ஜைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் உண்டு. கடைகளில் அதிக  நேரம் மின் தடை ஏற்பட்டுவிட்டால் ஃபிரிட்ஜில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுவிடும். இதற்கு மாற்றாக நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘கூல்  இன்ஃபினிடி’  என்ற நிறுவனம் ‘ஐஸ் வோர்ட் 300’ என்ற புதிய ஃபிரிட்ஜை உருவாக்கியுள்ளது. இந்தப் புது சாதனத்துக்கு ஆறு மணி நேரம் மின்சாரம்  இருந்தால் போதும். அந்த நேரத்திற்குள், பெட்டியைச் சுற்றி நிரப்பப்பட்டுள்ள நீரை ஐஸ் கட்டிகளாக மாற்றிவிடும்.

பிறகு மின்சாரம் இல்லாவிட்டாலும்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு, பெட்டிக்குள் உள்ள பண்டங்களை 6 டிகிரிக்கும் குறைவான குளிர்ச்சியில் வைத்திருக்கும். ஆசிய நாடுகளில் ஐஸ் கட்டிகளை வெளியில் வாங்கி வந்து, தெர்மாகோல் பெட்டிகளில் கொட்டி, அதில் நேரடியாகவே உணவுப்  பொருட்களைஅமிழ்த்து வைத்துவிடுவார்கள். அதைவிட, ‘ஐஸ் வோர்ட் 300’ பெட்டியில், நல்ல குளிர்ச்சியை கூடுதல் நேரத்திற்கு பெற முடியும்  என்கின்றனர், அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

தொகுப்பு: க.கதிரவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்