SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3ம் நாளாக இறங்குமுகத்தில் தங்கம் விலை : சவரன் ரூ.128 குறைந்து ரூ.32,512-க்கு விற்பனை

2020-02-27@ 15:48:59

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16 குறைந்து ரூ.4,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 குறைந்து ரூ. 50.90-க்கும் கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.50,900க்கும் விற்பனையாகிறது.  

தினமும் புதிய உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் விலை இந்தாண்டு புத்தாண்டு முதல் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது.

9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 உயர்வு

கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் “ஜெட்” வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.94 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4166க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.752 அதிகரித்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 328க்கு விற்றது. தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஒரு சவரன் ரூ.25,600க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் (24ம் தேதி வரை) மட்டும் சவரன் ரூ.7728 அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 குறைந்தது. நேற்றும் சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488க்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்குவோரை சுற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்