SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

T-20 உலக கோப்பை தொடரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்த் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியப் பெண்கள் அணி

2020-02-27@ 15:11:08

மெல்போர்ன்: T-20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியப் பெண்கள் அணி முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'T-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. ரோஸ்மேரி பந்துவீச்சில் தனியா  23 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10 ரன்களில் அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத் 1 ரன், வேதா 6 ரன்கள் எடுத்து ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். ஷபாலி வர்மா 46 ரன்களில் நம்பிக்கை அளித்தார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது  ஷிகா பாண்டே (10) அவுட்டாகாமல் இருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு ராகெல் 12 ரன்கள், கேப்டன் சோபி டிவைன் 14 ரன்கள் எடுத்தனர். சுஜீ பேட்ஸ் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். ராதா யாதவ் 'சுழலில்' கேட்டி 25 எடுத்து அவுட்டானார். அமெலியா கெர் பவுண்டரியாக விளாசி நெருக்கடி தந்தார். ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஜென்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 'ஏ' பிரிவில் மூன்று போட்டியிலும் வென்றுள்ள இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்