SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு: சவரன் ரூ.32,640-க்கு விற்பனை

2020-02-27@ 10:52:52

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.32,656-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,082-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.32,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்க்த்தின் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.592 குறைந்து ரூ.32,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.30 காசுகள் குறைந்து ரூ. 51.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 51,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ. 51.40-க்கு விற்பனை செய்யப்பட்ட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்